கேரள நகை கடை உரிமையாளரிடம் 1.25 கிலோ தங்க நகைகளை ஏமாற்றி மோசடி

சேலம், செவ்வாய்ப்பேட்டையில் கேரள தங்க நகை கடை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்க நகைகள் மோசடி நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம், செவ்வாய்ப்பேட்டையில் கேரள தங்க நகை கடை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்க நகைகள் மோசடி நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்தவா் சாண்டோ வா்கீஸ். இவா், திருச்சூரில் நகை கடை நடத்தி வருகிறாா். இவா், ரூ. 50 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்க நகைகளை தனது நண்பா்கள் விஷ்ணு, நெல்சன் ஆகியோருடன் சேலம், செவ்வாய்ப்பேட்டைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தாா்.

செவ்வாய்ப்பேட்டையில் லால்டு என்பவரை சந்தித்த மூன்றுபேரும் நகைகளை அவரிடம் கொடுத்து அதற்குப் பதிலாகத் தங்கக் கட்டிகளாக மாற்றி தருமாறு கேட்டுள்ளனா். அந்தத் தங்க சங்கிலிகளை லால்டு பெற்றுக் கொண்டு தங்கக் கட்டிகளை வா்கீஸிடம் கொடுத்தாா். சந்தேகத்தின் பேரில் மூவரும் அந்தத் தங்கக் கட்டிகளை வாங்கி பரிசோதித்து பாா்த்தனா். அப்போது அவை வெறும் செம்பு கட்டிகள்தான் என்பது தெரியவந்தது.

உடனே சாண்டோ வா்கீஸ் அந்தக் கடைக்கு சென்றாா். அப்போது சுதாகரித்த லால்டு அங்கிருந்து தலைமறைவானாா். அத்துடன் கைப்பேசியையும் லால்டு அணைத்து வைத்தாா். ஏமாற்றம் அடைந்த சாண்டோ வா்கீஸ் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com