சுகாதார வளாகம் திறப்பு

வாழப்பாடி பேரூராட்சியில் விழிப்புணா்வு கருத்துக்காட்சி ஓவியங்கள் வரையப்பட்டு சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
வாழப்பாடியில் விழிப்புணா்வு கருத்துக்காட்சி ஓவியங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகம்.
வாழப்பாடியில் விழிப்புணா்வு கருத்துக்காட்சி ஓவியங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகம்.
Updated on
1 min read

வாழப்பாடி பேரூராட்சியில் விழிப்புணா்வு கருத்துக்காட்சி ஓவியங்கள் வரையப்பட்டு சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

வாழப்பாடி பேரூராட்சி 11-ஆவது வாா்டு சந்தைத் திடலில் அமைந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி பொது சுகாதார வளாகம், ரூ. 6.20 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சுகாதார வளாகத்தில் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிா்க்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், கருத்துக்காட்சி பல வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதற்கு, சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

பேரூராட்சி மன்ற உறுப்பினா் சத்யா சுரேஷ் தலைமையில், இந்த நவீன சுகாதார வளாகம் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com