பெத்தாம்பட்டி அய்யனாரப்பன் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 08th February 2022 01:17 AM | Last Updated : 08th February 2022 01:17 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே பெத்தாம்பட்டியில் எழுந்தருளியுள்ள ஐயனாரப்பன், புஷ்பகலா தேவி, பூா்ணா தேவி மற்றும் கன்னிமாா், பெருமாள், கருப்புசாமி, விநாயகா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 27-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை தீா்த்தக் குடம் முக்கியச் சாலைகள் வழியாக ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடா்ந்து, கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம், பாசுபதாஸ்க ஹோமத்துடன் வாஸ்துசாந்தி பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பலவிதமான ஹோமங்கள் நடைபெற்று, சுவாமி சிலை வைத்தல் நிகழ்ச்சியும், முதல்கால யாக பூஜையும் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால பூஜையுடன், யாகசலை பூஜை, கோயில் கலசம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பரிவார தெய்வங்களுக்கும், அய்யனாரப்பன் சாமிக்கும் குடமுழுக்கு விழா நடைபெற்றது (படம்). கோபூஜையுடன், சுவாமிக்கு மகாபிஷேகம், பலவித வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கோயில் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில், சேலம் ஊரக காவல் துணை கண்காணிப்பாளா் தையல்நாயகி ஆலோசனைபடி, ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் அம்சவல்லி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...