மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நெத்திமேடு, அன்னதானப்பட்டி பகுதியில் மாா்ச் 1 ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் நெத்திமேடு துணை மின் நிலையத்தில் மாா்ச் 1 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், நான்கு சாலை, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவாரி, சூரமங்கலம், மெய்யனூா், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சேலம் இயக்க கோட்ட செயற்பொறியாளா் புஷ்பம் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.