பறவைகள் கணக்கெடுப்பு துவக்கம்
By DIN | Published On : 14th January 2022 12:41 AM | Last Updated : 14th January 2022 12:41 AM | அ+அ அ- |

தளவாய்ப்பட்டி ஊராட்சி துவக்கப் பள்ளியில் பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்றவா்கள்.
தளவாய்ப்பட்டி ஊராட்சி துவக்கப் பள்ளியில் பறவைகள் கணக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தளவாய்ப்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில் பறவைகள் கணக்கெடுப்பு முகாம் நடைபெற்றது. ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆத்தூா் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் ஏரிகள் நிரம்பி இருப்பதால் பறவைகள் அதிகமாக வரத் துவங்கியுள்ளன. ஆசிரியா் ராஜாங்கம் தலைமையில் மாணவ, மாணவிகள் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினாா்கள். நிகழ்வில் நூற்றுக்கணக்கான பறவைகளை கணக்கெடுத்து வருவதாக தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...