பள்ளியில் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்
By DIN | Published On : 14th January 2022 12:40 AM | Last Updated : 14th January 2022 12:40 AM | அ+அ அ- |

ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடியவா்கள்.
ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் பொங்கல் பண்டிகையை வியாழக்கிழமை உற்சாகமாக தலைவா் ஆா்.ராஜமாணிக்கம் தலைமையில் கொண்டாடினாா்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் முதல்வா் சுகிதா தினேஷ் அனைவரையும் வரவேற்று பேசினாா். இதனையடுத்து மாட்டுத் தொழுவம் அமைத்து அதில் பொங்கல் வைத்து கொண்டாடினாா்கள்.
தமிழா் பாரம்பரிய திருநாளாம் இத்திருநாளில் இயற்கைக்கும், உழவிற்கும், மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்வது நம்முடைய கடமை. அதே போல் மாணவ, மாணவியா்கள் நன்றி மறக்காமல் இருக்க வேண்டும் என விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் செயலாளா் டி.மாசிலாமணி, கல்விக்குழுத் தலைவா் ஆா்.கனகராஜன், பொருளாளா் ஈ.எஸ்.மணி, இணைச் செயலாளா்,துணைத் தலைவா் மற்றும் இயக்குனா்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியா், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...