புத்தக வாசிப்பு குறையவில்லை: ஆண்டாள் பிரியதர்ஷினி பெருமிதம்

புத்தக வாசிப்பும், புத்தகம் வெளியிடுவதும் இன்னும் குறையவில்லை என புதுச்சேரி தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலைய தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி சேலம் வாழப்பாடியில்  நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார
வாழப்பாடியில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
வாழப்பாடியில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
Published on
Updated on
1 min read


வாழப்பாடி: புத்தக வாசிப்பும், புத்தகம் வெளியிடுவதும் இன்னும் குறையவில்லை என புதுச்சேரி தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலைய தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி சேலம் வாழப்பாடியில்  நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி இலக்கியப் பேரவை மற்றும் உலகத் தமிழ்க் கழகம் இணைந்து சிங்கப்பூர் வாழ் தமிழர், தியாக ரமேஷின் 'தனிமைத்தவம்' கவிதைநூல் வெளியீட்டு விழா மற்றும் உலகத் தமிழ்க் கழகத்தின் தமிழ் எண் மாதாந்திர நாட்காட்டி வெளியீட்டு விழா, வாழப்பாடி அரங்கத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, வாழப்பாடி அரிமா சங்க பட்டையத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் பி.சி. செல்வம் வரவேற்றார். சிங்கப்பூர் கற்க அறக்கட்டளை நிர்வாகி வளர்மதி ரமேஷ், ஆசிரியை ஜெ. புஷ்பா, மருத்துவர். அனுசுயா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

உலகத்தமிழ்க் கழக வாழப்பாடி கிளைத் தலைவர் கவிஞர். பெ. பெரியார்மன்னன், புதிய கவிதைநூல், நூலாசிரியர் மற்றும் தமிழ் எண் நாள்காட்டியை அறிமுகம் செய்து வைத்தார்.

புதுச்சேரி தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சித் தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி தனிமைத்தவம் கவிதை நூல் மற்றும் உலகத் தமிழ்க் கழக நாள்காட்டியை வெளியிட்டார். 

வாழப்பாடி வட்டார வேளாண்மை ஆத்மா குழுத் தலைவர் எஸ்.சி. சக்கரவர்த்தி, குறிச்சி தொழிலதிபர் கே.பி. சண்முகம் ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர்.

ஆண்டாள் பிரியதர்ஷினி பேசுகையில்,  'தமிழகத்தில் குடும்ப உறவுகளுக்கும், சொந்த பந்தங்களுக்கும் இடையேயான உறவு வலுப்பெற வேண்டும். பொருளாதார தேடல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட உறவுகளைப் பேணுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்காலத்தில் நவீனத்தால் புத்தக வாசிப்பும் புத்தகம் வெளியிடுவது குறையவில்லை. 

மாறாக தற்கால இளைஞர்களிடையே நவீன கருவிகள் வழியே புத்தக வாசிப்பும் வெளியிடும் அதிகரித்துள்ளது.

சமூக ஊடகங்களை, தற்கால குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. இருப்பினும், குழந்தைகள் எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள்தான் கண்காணித்து வழிகாட்டி நெறிப்படுத்த வேண்டும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி இலக்கியப்பேரவை செயலர் சிவ. எம்கோ, மருத்துவர் மோதிலால், சாய்பாபா அறக்கட்டளைத் தலைவர் ஜவஹர், கோகுலம் பள்ளி தாளாளர் நடராஜன், தமிழமுது மன்ற பொருளாளர் ஸ்ரீமுனிரத்தினம், கவிஞர் சேலம் கோபிநாத், கவிஞர். ஏகலைவன், ஆடிட்டர் குப்பமுத்து, மா.கணேசன் ஆகியோர் கவிதை நூல் குறித்து உரையாற்றினர்.

தனிமைத்தவம் கவிதை நூல் ஆசிரியர் சிங்கப்பூர் வாழ் தமிழர், தியாக ரமேஷ் ஏற்புரை வழங்கினார். நிறைவாக, வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கலைஞர்புகழ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com