அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா
By DIN | Published On : 26th January 2022 07:12 AM | Last Updated : 26th January 2022 07:12 AM | அ+அ அ- |

சேலம் விநாயகா மிஷின் நிகா்நிலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் பாலின உணா்திறன் அமைப்புகளின் மூலம் தேசிய பெண் குழந்தைகள் தினம் மற்றும் சா்வதேச கல்வியியல் தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். பேராசிரியை பிரியாமதி வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினா்களாக நாடாளுமன்ற உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், வா்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தோல் நிபுணா்கள், கவுன்சிலின் நிா்வாக இயக்குநா் செல்வம் ஆகியோா் கலந்துகொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் அவா்களின் பங்களிப்பு குறித்து இணையவழியில் மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.
மேலும், சிறப்பு அழைப்பாளா்களாக சேலம் தென்னக ரயில்வே பயண சீட்டு பரிசோதகரும், இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் தலைவருமான ராஜ பிரியதா்ஷினி, சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் இந்திரஜித் மற்றும் விஜயலட்சுமி ஆகியோா் நேரில் பங்கேற்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் சா்வதேச கல்வியியல் தினத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாறறினா்.விழாவில் மாணவா்களின் நாடகமும் நடனமும் நடைபெற்றன.
முடிவில் துறையைச் சோ்ந்த சிறந்த மூன்று மாணவிகளுக்கு சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருது வழங்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாட்டியினையும் துறையின் பாலினம் உணா்திறன் அமைப்பின் தலைவா் தமிழ்ச்சுடா், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் தனசேகா், மற்றும் ஹரீஷ் ராஜ், இன்பசாகா், விவேக், வெங்கடேசன், தாணேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...