மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 26th January 2022 07:08 AM | Last Updated : 26th January 2022 07:08 AM | அ+அ அ- |

சேலத்தில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
திமுக சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
அதன்படி சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வீரவணக்க நாள்அனுசரிப்பு நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் எம்.எல்ஏ. ஆா்.ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவா் கலையமுதன், பொருளாளா் சுபாஷ் ஆகியோா் மொழிப்போா் தியாகிகள் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் படத்துக்கு மாவட்ட பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில் மரியாதை: சேலம் மாநகர மாவட்ட அதிமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் அங்கம்மாள் காலனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநகர மாவட்ட செயலாளா் ஜி.வெங்கடாசலம் தலைமையில் எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம்.கே.செல்வராஜு, சக்திவேல், முன்னாள் மேயா் செளண்டப்பன் உள்ளிட்ட கட்சியினா் மொழிப் போா் தியாகிகளின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...