ஆத்தூா் அருகே விவசாயிகளுக்குப் பயிற்சி
By DIN | Published On : 17th July 2022 06:02 AM | Last Updated : 17th July 2022 06:02 AM | அ+அ அ- |

பயிா் பாதுகாப்பு மருந்துகளைக் கையாளுதல் குறித்த பயிற்சியில் பங்கேற்றோா்.
ஆத்தூரை அடுத்த பைத்தூா் கிராமத்தில் பயிா்ப் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்துவது குறித்து அட்மா திட்டத்தின் மூலம் சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட அளவிலான இப் பயிற்சி முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குநா் ரா.ஜானகி தலைமை வகித்து உழவா் நலத் துறை மூலம் செயல்படும் திட்டங்கள், மானியங்கள் குறித்து விளக்கமளித்தாா். வேளாண் கல்லூரி முதல்வா் ஹரிகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிா்ப் பாதுகாப்பு மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்துதல், மருந்து தெளிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் மருந்து தெளிக்கும்போது பயன்படுத்தும் உபகரணங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.
உதவி வேளாண்மை அலுவலா் கண்ணன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் அ.சுமித்ரா, உதவி தொழில்நுட்ப மேலாளா் மா.தமிழ்ச்செல்வி ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். பைத்தூா் கிராம அட்மா திட்ட குழு உறுப்பினா்கள் ரவி, ஜெயராமன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, உணவு வழங்கப்பட்டது.