தனியாா் பள்ளியில் ஆசிரியைகளுக்குப் பயிற்சி முகாம்
By DIN | Published On : 17th July 2022 05:59 AM | Last Updated : 17th July 2022 05:59 AM | அ+அ அ- |

ஆத்தூா் துளுவ வேளாளா் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஆசிரியைகளுக்குப் பயிற்சி முகாம் பள்ளி தலைவா் விஜயராம் அ.கண்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி முகாமில் பள்ளித் தலைமையாசிரியை அ.திலகவதி அனைவரையும் வரவேற்று பேசினாா். முகாமில் சிறப்பு விருந்தினராக என்டிடி பயிற்சியாளா் ஹீனாடாணி கலந்துகொண்டு ஆசிரியைகளுக்கு பயிற்சியளித்தாா்.
300- க்கும் மேற்பட்ட ஆசிரியைகளுக்கு பல்வேறு தலைப்புகளில் அறிவுரைகளை வழங்கினாா்.முகாமில் செயலாளா் அ.திருநாவுக்கரசு, ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.