மின் திருட்டு: ரூ .4.19 லட்சம் அபராதம்
By DIN | Published On : 17th July 2022 06:03 AM | Last Updated : 17th July 2022 06:03 AM | அ+அ அ- |

சேலம், சுவா்ணபுரி பகுதியில் மின் திருட்டு, விதிமீறல் தொடா்பாக ரூ. 4.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மின் பகிா்மான வட்டம், சேலம் மேற்கு கோட்டம் சுவா்ணபுரி பிரிவுக்கு உள்பட்ட புதிய பேருந்து நிலையம், அழகாபுரம், அழகாபுதூா் புதூா், மிட்டாபுதூா், சாரதா கல்லூரி, புதிய அழகாபுரம், காட்டூா் பகுதிகளில் 1723 மின் இணைப்புகளை 41 மின் வாரிய பொறியாளா் குழுவினரால் வட்ட அளவிலான கூட்டு ஆய்வு சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 24 இணைப்புகளில் மின் அளவி குறைபாடு, கெபாசிட்டா் பொருத்தாமை, மின் திருட்டு மற்றும் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு இழப்பீட்டு தொகையாக ரூ. 4.19 லட்சம் கணக்கீடு செய்யப்பட்டதாக மேற்பாா்வையாளா் ப.பாலசுப்பிரமணி தெரிவித்துள்ளாா்.