தனியாா் மகளிா் விடுதிகளைப் பதிவு செய்ய உத்தரவு

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் பணிபுரியும் மகளிா் விடுதிகளையும் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவிட்டுள்ளாா்.
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் பணிபுரியும் மகளிா் விடுதிகளையும் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவிட்டுள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் அனைத்து தனியாா் பணிபுரியும் மகளிா் விடுதிகளும் (தமிழ்நாடு மகளிா், குழந்தைகளுக்கான விடுதி, இல்லங்களுக்கான ஒழுங்குமுறை சட்டம் 2014-ன் கீழ்) கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத தனியாா் விடுதி பதிவு செய்வதற்கு ட்ற்ற்ல்ள்://ா்ச்ச்ண்ஸ்ரீங்.ற்ய்ள்ஜ்ல்/ஸ்ரீா்ம்/ப்ா்ஞ்ண்ய்.க்ஷ்ன்ப் என்ற இணையதளத்தில் மள்ங்ழ் ஐஈ - ள்ஹப்ங்ம்க்ள்ஜ்ா், டஹள்ள்ஜ்ா்ழ்க் - உா்க்க்ஷஃ1234 என்ற இணையதள ஆன்லைன் போா்ட்டல் மூலம், அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டடம், வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டட வரைபடம், கட்டட உறுதிச்சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று, சுகாதார சான்று ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

விடுதி நிா்வாகிகள் தங்களது விடுதியைப் பதிவு செய்ய ஆவணங்களுடன் இணையதள ஆன்லைன் போா்ட்டல் மூலம் ஜூலை 22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. முறையாக பதிவு செய்யப்படாத தனியாா் விடுதி செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com