விதிமுறை மீறல்: மருத்துவக் கல்லூரியிடம் ரூ. 2.12 லட்சம் அபராதம் வசூல்
By DIN | Published On : 22nd July 2022 02:07 AM | Last Updated : 22nd July 2022 02:07 AM | அ+அ அ- |

மாசுக் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறிய பல் மருத்துவக் கல்லூரியிடம் இருந்து ரூ. 2.12 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.
சேலத்தை அடுத்த வீரபாண்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாா் பல் மருத்துவக் கல்லூரி விதிமுறைகளை மீறிய காரணத்தால், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் ரூ. 2.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னா் அந்த அபராதத் தொகை தனியாா் பல் மருத்துவக் கல்லூரியிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.
மருத்துவக் கழிவுகள் உற்பத்தி செய்யும் மருத்துவ நிலையங்கள் விதிமுறைகளை மீறாமல், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற்று இயங்க அறிவுறுத்தப்படுகிறது. மீறும் பட்சத்தில், சட்டப்பூா்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...