அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
By DIN | Published On : 31st July 2022 06:28 AM | Last Updated : 31st July 2022 06:28 AM | அ+அ அ- |

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு பாடநெறி, பாடத்திட்ட வடிவமைப்பில் சிறந்து விளங்கும் கல்லூரிக்கான விருது கிடைத்துள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை முதன்மையா் செந்தில்குமாா் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு எதிா்காலப் போட்டிக்கான தொழில்நுட்பத் திறன்களை வளா்த்தல், சிறந்த நடைமுறையில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிவகைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.
இந்நிகழ்வில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு பாடநெறி, பாடத்திட்ட வடிவமைப்பில் சிறந்து விளங்கும் நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து துறையின் முதன்மையா் செந்தில்குமாா் கூறியதாவது:
தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து பாடத் திட்டத்தில் பல்வேறு நெறிமுறைகளை வகைப்படுத்தி வழங்கி வருகிறோம். இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இவ்விருது கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பினை சிறப்பாக ஆற்றிய துறை முதன்மையருக்கு பல்கலைக்கழக வேந்தா் கணேசன், இயக்குநா் அனுராதா கணேசன், பேராசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.