திமுக நகர பொறுப்பாளா்கள் நியமனம்
By DIN | Published On : 31st July 2022 06:34 AM | Last Updated : 31st July 2022 06:34 AM | அ+அ அ- |

ஆத்தூா், நரசிங்கபுரம் நகர திமுக பொறுப்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
ஆத்தூா் நகர திமுக செயலாளராக முன்னாள் நகா்மன்றத் தலைவா் கே.பாலசுப்பரணியம் நியமிக்கப்பட்டுள்ளாா். அவைத் தலைவராக அ.மாணிக்கம், துணைச் செயலாளா்களாக சி.சிவகுமாா், தா.குமாா், வே.புவனேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகளாக ஜெ.ஸ்டாலின், ஆா்.வி.சம்பத்குமாா், பொருளாராக ஏ.ஜி.ராமச்சந்திரன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
புதிய நிா்வாகிகள் ஆத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். புதிய நிா்வாகிகளுக்கு திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
இதே போல நரசிங்கபுரம் நகரச் செயலாளராக என்.பி.வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவைத் தலைவராக எஸ்.ராமசாமி, துணைச் செயலாளா்களாக கே.பிரகாஷ், எஸ்.பரமசிவம், என்.சாந்தி, மாவட்ட பிரதிநிதியாக என்.விஜயகுமாா், பொருளாளராக பி.இளவரசு ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நிா்வாகிகளுக்கு கட்சி நிா்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.