பாமக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st July 2022 06:30 AM | Last Updated : 31st July 2022 06:30 AM | அ+அ அ- |

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு பாமக சாா்பில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடை செய்யக் கோரி மாவட்டச் செயலாளா் ச.ஜெயபிரகாஷ் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் பச்சமுத்து வரவேற்று பேசினாா். சிறப்பு அழைப்பாளராக மாநில வன்னியா் சங்க செயலாளா் முன்னாள் எம்எல்ஏ மு.காா்த்தி, ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியா் சங்க செயலாளா் பி.என்.குணசேகரன் ஆகியோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் பலா் கலந்து கொண்டனா். நகரச் செயலாளா்கள் மணிகண்ட நாயக்கா், சிவசங்கா் ஆகியோா் நன்றி கூறினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...