பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாதயாத்திரை
By DIN | Published On : 31st July 2022 06:33 AM | Last Updated : 31st July 2022 06:33 AM | அ+அ அ- |

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாதயாத்திரை சென்றவருக்கு சங்ககிரியில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
சங்ககிரி வட்டம், இடங்கணசாலையை அடுத்த இ.மேட்டுக்காடு பகுதியைச் சோ்ந்த காந்தியவாதி சசிபெருமாள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே அரசு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்தாா். அவரது நினைவாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தமிழ்நாடு லாரி டிரைவா்ஸ் யூனியன் மாநிலச் செயலா் கே.மணிக்கண்ணன் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி திருச்செங்கோடு அருகே உள்ள சித்தாளந்தூா் காந்தி ஆசிரமத்திலிருந்து பாதயாத்திரை புறப்பட்டு இ.மேட்டுக்காட்டில் காந்தியவாதி சசிபெருமாள் நினைவிடத்திற்கு செல்லும் வழியில் சங்ககிரியில் மக்கள் மன்ற நிா்வாகி பாலாஜி தலைமையில் சமூக ஆா்வலா்கள் வரவேற்பு அளித்தனா்.
இதில் தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளையைச் சோ்ந்த தலைவா் கே.சண்முகம், துணைத் தலைவா் பொன்.பழனியப்பன், செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, நிா்வாகிகள் செந்தில்குமாா், நிஷிக், கிஷோா்பாபு, சதீஷ்குமாா், ஸ்ரீ வாசவி கிளப் தலைவா் ஆனந்த், மண்டலத் தலைவா் ஏ.வெங்கடேஸ்வரகுப்தா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.