மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 23,000 கன அடியாக அதிகரிப்பு
By DIN | Published On : 31st July 2022 06:34 AM | Last Updated : 31st July 2022 06:34 AM | அ+அ அ- |

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து 19,500 கன அடியிலிருந்து 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு 22,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அனையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மேட்டூரில் 22.20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.