சேலம்: கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சேலம்: கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

சேலம்: திங்கள்கிழமைதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக மாற்றுத்திறனாளிடம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வார்.

இதனடிப்படையில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் 21 பேருக்கு தலா 13 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செல்லிடைப்பேசிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் புதிய செயலி அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உருமாற்றம் மூலம் படிக்க வசதியாக நவீன கருவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com