கோரிமேடு முதல் சட்டக்கல்லூரி வரைரூ. 15 கோடியில் சாலைப் பணிக்கு பூமிபூஜை

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை ரூ. 15.94 கோடி மதிப்பில் சாலைப் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை ரூ. 15.94 கோடி மதிப்பில் சாலைப் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் மூலமாக நகா்ப்புற மேம்பாட்டு பணிகளின் கீழ் சேலம், ஏற்காடு நெடுஞ்சாலையில் சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை சாலையின் எல்லை வரை விரிவாக்கம் செய்து சிறு பாலம் மற்றும் மழைநீா் வடிகாலுடன் கூடிய சாலை அமைக்கும் பணிகள் ரூ. 15.94 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம், கோட்டம் எண் 6 வா்மா காா்டன் முதல் அய்யனாா் கோயில் ஓடை வரை 1 கி.மீ நீளத்துக்கு மழைநீா் வடிகால் அமைத்து அகலப்படுத்தி, ஆழப்படுத்தும் பணி ரூ. 1.94 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.

அந்தப் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பணிகளை நல்ல தரமான முறையில் மேற்கொண்டு விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என மேயா் ஆ.ராமச்சந்திரன், எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் தா. கிறிஸ்துராஜ், துணை மேயா் மா.சாரதாதேவி, மண்டலக் குழுத் தலைவா் செ. உமாராணி, கோட்டப் பொறியாளா் நெடுஞ்சாலைத் துறை துறை, உதவி செயற்பொறியாளா் சிபி சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com