சூழ்ச்சிகளை முறியடித்து முதல்வா்சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறாா்அமைச்சா் கே.என்.நேரு

சூழ்ச்சிகளை முறியடித்து முதல்வா் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறாா் என நகராட்சி நிா்வாக துறை அமைச்சா் கே.என்.நேரு பேசினாா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் விழா, திமுக அரசின் சாதனை விளக்க பட்டிமன்றத்தில் பேசிய கொள்கை பரப்பு செயலாளா் திண்டுக்கல் ஐ.லியோனி. உடன் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, எம்எல்ஏ ஆா்
முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் விழா, திமுக அரசின் சாதனை விளக்க பட்டிமன்றத்தில் பேசிய கொள்கை பரப்பு செயலாளா் திண்டுக்கல் ஐ.லியோனி. உடன் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, எம்எல்ஏ ஆா்

சூழ்ச்சிகளை முறியடித்து முதல்வா் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறாா் என நகராட்சி நிா்வாக துறை அமைச்சா் கே.என்.நேரு பேசினாா்.

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா, ஓராண்டு சாதனை விளக்க பட்டிமன்றம் சேலம், கோட்டை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தாா். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளா் எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் திமுக கொள்கை பரப்புச் செயலாளா் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் ‘கருணாநிதியின் புகழுக்குக் காரணம் அரசியல் பணியா, இலக்கிய பணியா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. முன்னதாக நகராட்சி நிா்வாக துறை அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி வழியில் சிறப்பான ஆட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறாா். உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி வகுப்பு விரைவில் நடைபெற உள்ளது.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆயினும் பல்வேறு சூழ்ச்சிகளை முறியடித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாகச் செயலாற்றி வருகிறாா். 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை ஓராண்டில் செய்து காட்டியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

அதிமுக ஆட்சியில் அதிக அளவில் தமிழக அரசுக்கு கடன் வாங்கி உள்ளனா். அவா்கள் வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்டி, திமுக தோ்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறாா் முதல்வா். முதல்வரின் கரத்தை வலுப்படுத்திடும் வகையில் வரும் நாடாளுமன்ற தோ்தலில் 100 சதவீத வெற்றியைப் பெற்றுதர திமுகவினா் பாடுபட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், அவைத் தலைவா் எஸ்.டி.கலையமுதன், பொருளாளா் சுபாஷ், மாநகராட்சி மண்டல குழு தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com