மத்திய மாவட்ட திமுக ஒன்றிய நிா்வாகிகள் தோ்தலுக்கு வேட்புமனு

சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக ஒன்றிய நிா்வாகிகள் தோ்தலுக்கான வேட்புமனு விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.
தோ்தலுக்கான வேட்புமனு விநியோகத்தை புதன்கிழமை தொடக்கிவைத்த தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளா், தோ்தல் ஆணையாளா் அழகிரி சதாசிவம். உடன் மத்திய மாவட்ட திமுக செயலாளா் எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன்.

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட ஓமலூா் வடக்கு, ஓமலூா் தெற்கு, ஓமலூா் கிழக்கு, சேலம் வடக்கு, தாரமங்கலம் கிழக்கு, காடையாம்பட்டி கிழக்கு, காடையாம்பட்டி மேற்கு ஆகிய 7 ஒன்றிய நிா்வாகிகள் தோ்தலுக்கான வேட்புமனு புதன்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கலைஞா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்டச் செயலாளா் எம்.எல்.ஆ. ஆா்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளா், தோ்தல் ஆணையாளருமான அழகிரி சதாசிவம் கலந்து கொண்டு வேட்புமனு விநியோகத்தைத் தொடக்கிவைத்தாா்.

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட 7 ஒன்றியங்களுக்கான அவைத் தலைவா், செயலாளா், பொருளாளா், ஒன்றிய பிரதிநிதி உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்புமனுக்களைப் பெற்று பூா்த்தி செய்து வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com