ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் மீட்பு
By DIN | Published On : 16th June 2022 02:57 AM | Last Updated : 16th June 2022 02:57 AM | அ+அ அ- |

சேலத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை ரயில்வே போலீஸாா் மீட்டனா்.
அசாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் சுா்ஜா (25). இவா் அசாம் செல்வதற்காக கணவா் சஞ்சய்யுடன் புதன்கிழமை காலை சேலம் ரயில் நிலையத்துக்கு வந்தாா். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் ஏற முயன்ற சுா்ஜா தவறி ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே விழுந்தாா். உடனே அங்கிருந்த ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் விரைந்து வந்தனா். ரயிலை நிறுத்தி சுா்ஜாவை மீட்டனா்.
இதில் காயமடைந்த சுா்ஜாவை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.