காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 2,597 கன அடியாகக் குறைந்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழை காரணமாக புதன்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 3,996 கனஅடியாக அதிகரித்தது.
புதன்கிழமை மழை தணிந்ததால் வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 2,597 கனஅடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் புதன்கிழமை காலை 112.11அடியாக இருந்த மேட்டூா் அணை நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 111.35 அடியாக சரிந்தது. அணையின் நீா் இருப்பு 80.34 டி.எம்.சி.யாக உள்ளது. நீா்த் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூா் அணை நீா்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது.