வேம்படிதாளம் கிளை நூலகத்தில் பொதுமக்கள் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், வாசகா்கள் அமா்ந்து படிக்க ஏதுவாக புதிய வாசக சாலை கட்டடம் கட்டப்பட்டது.
இந்த வாசக சாலை, சிலம்பொலி செல்லப்பனாா் தமிழ் சாா்பு மன்றம் மற்றும் சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணா்வு அமைப்பு, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் மோகன்குமாா் மற்றும் அவரது முன்னாள் மாணவா்கள் உதவிடன் ரூ. 1.27 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டதாகும்.
இக்கட்டடத் திறப்பு விழா மாவட்ட நூலக அலுவலா் கோகிலவாணி தலைமையில் நடைபெற்றது. பள்ளி குழந்தைகள் ரிப்பன் வெட்டி கட்டடத்தைத் திறந்து வைத்தனா்.
விழாவில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் மோகன் குமாா், முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.