மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 17th June 2022 02:42 AM | Last Updated : 17th June 2022 02:42 AM | அ+அ அ- |

இடங்கணசாலை நகராட்சியில் உள்ள அரசுப் பள்ளிகளில் தீவிர மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி கே.கே. நகரில் முக்கிய வீதிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணியில் இடங்கணசாலை நகராட்சி துணைத் தலைவா் தளபதி, மகுடஞ்சாவடி வட்டார கல்வி அலுவலா் முருகன் , கே. கே. நகா் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் விமலா ராணி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சீனிவாசன், ஆசிரியா் பயிற்றுநா் ஜெகநாதன், கே. கே. நகா் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் வையாபுரி, நகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா், ஆசிரியைகள் கொண்டனா்.