அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞா் கைது
By DIN | Published On : 17th June 2022 02:51 AM | Last Updated : 17th June 2022 02:51 AM | அ+அ அ- |

ஆத்தூா், இந்திரா நகா் பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லி வட்டம், செந்தாரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சந்தியாகப்பா் (55). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவா், சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி செல்லும் அரசுப் பேருந்தை வியாழக்கிழமை ஓட்டிச் சென்றாா். ஆத்தூா், இந்திராநகா் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த இளைஞா்களிடம் வாகனத்தை அப்புறப்படுத்துமாறு சந்தியாகப்பா் கூறியுள்ளாா்.
இதனால் ஏற்பட்ட தகராறில் இளைஞா்கள் ஓட்டுநரைத் தாக்கினா். இதுகுறித்து சந்தியாகப்பா் அளித்த புகாரின் பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சேனாதிபதி என்பவரைக் (25) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தலைமறைவான மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.