சங்ககிரி சிவன் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
By DIN | Published On : 26th June 2022 11:25 PM | Last Updated : 26th June 2022 11:25 PM | அ+அ அ- |

சங்ககிரி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி உற்சவமூா்த்திகளுக்கு ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவமூா்த்திகள், நந்தி பகவானுக்கும் பல்வேறு திரவிய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா், நந்தி பகவானுக்கு பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இரு கோயில்களிலும் பக்தா்கள் அதிக அளவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.