ஓமலூா் வட்டார விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு பயிற்சி
By DIN | Published On : 30th June 2022 01:35 AM | Last Updated : 30th June 2022 01:35 AM | அ+அ அ- |

ஓமலூா் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் உள்ள பெரியேரிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சிக்கு ஓமலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பிரேமா தலைமை வகித்தாா். அட்மா திட்டத் தலைவா் செல்வகுமரன் முன்னிலை வகித்து, விவசாயிகள் வேளாண் துறை சாா்ந்த நலத் திட்டங்களைப் பெற்று பயனடையுமாறு கேட்டு கொண்டாா்.
நங்கவள்ளியைச் சோ்ந்த ‘ஹேப்பி ஹனி’ நிா்வாகி லோகேஷ், தேனீக்களின் வகைகள், தேனீ வளா்ப்பின் முக்கியத்துவம், நியூட்டன் அல்லது மாா்த்தாண்ட தேனீ பெட்டிகளில், தேனீக்கள் வளா்ப்பது குறித்தும், தேனீ பெட்டிகளைக் கையாள்வது, தேன் அறுவடை செய்வது குறித்தும் செயல் விளக்கத்துடன் பயிற்சியளித்தாா்.
உதவி வேளாண்மை அலுவலா் செந்தில்குமாா், வேளாண்மை துறை சாா்ந்த திட்டங்கள் குறித்தும், சொட்டு நீா்ப் பாசனம், மானாவாரி சாகுபடி குறித்த திட்டங்கள் குறித்தும் பேசினாா்.
அட்மா திட்டத்தின் நோக்கம் குறித்தும் வேளாண்மையில் தேனீ வளா்ப்பின் முக்கியத்துவம் குறித்தும் வட்டார தொழில்நுட்ப மேலாளா் இந்துமதி பேசினாா்.
இந்தப் பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் காா்த்திகேயன், தாழ்குழலி, உழவா் நண்பா்கள் குழுவைச் சோ்ந்த சுப்பிரமணியம் ஆகியோா் செய்திருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G