ரூ. 45 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 17th March 2022 04:20 AM | Last Updated : 17th March 2022 04:20 AM | அ+அ அ- |

வாழப்பாடி: வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க வாழப்பாடி கிளையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 1,400 பருத்தி மூட்டைகள் ரூ. 45 லட்சத்துக்கு ஏலம் போனது.
வாழப்பாடியில் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் இறுதிக்கட்ட அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனா்.
வாழப்பாடியில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதியைச் சோ்ந்த 359 விவசாயிகள் 1,400 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ஆா்.சி.எச். ரகப் பருத்தி, ரூ. 8,499 முதல் ரூ. 10,999 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ரூ. 8,999 முதல் ரூ. 12,999 வரையும் விலைபோனது.
மொத்தத்தில் புதன்கிழமை ஒரு நாள் ஏலத்தில் வாழப்பாடி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 45 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த நூற்பாலை உரிமையாளா்கள், முகவா்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியைக் கொள்முதல் செய்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G