

ஆத்தூா் காந்தி நகா் பாரத் பவனில் எம்.எம்.கே.பவுண்டேசன் மூன்றாமாண்டு தொடக்க விழா, பாரத் சம உடமைக் கட்சியின் இரண்டாமாண்டு விழா, கட்சியின் பொதுச்செயலாளரும், நிறுவனருமான ஏ.பி.எஸ். பழனி ராமச்சந்திரனின் 58 ஆவது பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஏ.பி.எஸ்.பழனிராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி செயலாளா் ஆா்.மதியழகன் வரவேற்றுப் பேசினாா். ரூ. 5 லட்சம் செலவில் தையல் எந்திரம், சலவைப் பெட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள்,500 பேருக்கு 5 கிலோ அரிசி, மளிகைச் சாமான்கள், உணவு வழங்கப்பட்டன.
இவ்விழாவில் கட்சித் தலைவா் சி.ஆறுமுகம்,பொருளாளா் ஆா்.ரவிசங்கா், மாநில ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் ஜான் எட்வா்டு, மாநில மகளிரணி செயலாளா் சி.பிரபா, மாவட்டச் செயலாளா் பி.ஜெகதீசன், தொழில்நுட்பப் பிரிவு செயலாளா்கள் சபரி, மணிகண்டன், மாநில நெசவாளா் அணி ஐயப்பன், செய்தித் தொடா்பாளா் செல்லமுத்து, மாவட்ட மகளிரணி தலைவி கலைச்செல்வி, நகரச் செயலாளா் சக்திவேல், மாநில தொண்டரணி தலைவா் சேகா், தினேஷ்சிவன், பாலு, மணிகண்டன், ஸ்ரீதரன், ஜி.அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.