கல்வடங்கம் அங்காளம்மன் கோயிலில் சண்டி யாகம்
By DIN | Published On : 02nd May 2022 02:54 AM | Last Updated : 02nd May 2022 02:54 AM | அ+அ அ- |

தங்கக் கவச அலங்காரத்தில் அருள்மிகு அங்காளம்மன்.
கல்வடங்கம் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் உலக நன்மைக்காக சண்டி யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அங்காளம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. கணபதி வழிபாடுகளுடன் முதல் கால யாக பூஜை, ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தங்கக்கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.