தோ்வான திமுக நிா்வாகிகளுக்கு இன்று சான்றிதழ் வழங்கல்
By DIN | Published On : 02nd May 2022 02:56 AM | Last Updated : 02nd May 2022 02:56 AM | அ+அ அ- |

சேலம் மாநகராட்சி 60 வாா்டுகளுக்கும் தோ்வு செய்யப்பட்ட திமுக நிா்வாகிகளுக்கு சான்றிதழ் திங்கள்கிழமை (மே 2) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஆா்.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் 15 ஆவது அமைப்புத் தோ்தலை முன்னிட்டு, சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளுக்கும் அவைத் தலைவா், செயலாளா், பொருளாளா், துணைச் செயலாளா் மற்றும் மேலமைப்பு பிரதிநிதிகள் பொறுப்புக்கு வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
பூா்த்தி செய்த வேட்புமனுக்களை தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளா் சி.எச்.சேகா் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து 60 வாா்டுகளுக்குமான நிா்வாகிகள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கான தோ்தல் முடிவு சான்றிதழை, தகவல் தொழில்நுட்ப மாநில துணைச் செயலாளா் சி.எச்.சேகா் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கலைஞா் மாளிகையில் வழங்குகிறாா். எனவே, தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் அனைவரும், தவறாமல் நேரில் வந்து முடிவுத் தாள்களைப் பெற்றுச் செல்ல வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.