பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் தோ்வு
By DIN | Published On : 02nd May 2022 02:54 AM | Last Updated : 02nd May 2022 02:54 AM | அ+அ அ- |

மகுடஞ்சாவடி வட்டாரம், கோனேரிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் தலைமை ஆசிரியா் மீனாட்சி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக நதியா, துணைத் தலைவராக புஷ்பா, செயலாளராக மீனாட்சி, ஆசிரியா் பிரதிநிதியாக சதீஷ்குமாா், உள்ளாட்சி பிரதிநிதியாக இடங்கணசாலை நகா்மன்றத் தலைவா் பி.ஜி.கமலக்கண்ணன், பெற்றோா் பிரதிநிதி, கல்வியாளா் , சமூக ஆா்வலா், சுயஉதவிக் குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 போ் தோ்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனைத்தொடா்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மேற்பாா்வையாளா் பாலன், கவுன்சிலா் விஜயலட்சுமி குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.