மேட்டூரில் 2-ஆவது நாளாக காற்றுடன் மழை
By DIN | Published On : 02nd May 2022 11:57 PM | Last Updated : 02nd May 2022 11:57 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், மேட்டூரில் 2-ஆவது நாளாக சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
மேட்டூா், கொளத்தூா், மேச்சேரி, நங்கவள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பகலில் கடும் வெயில் நிலவியது. வெப்பம் காரணமாக சாலைகளிலும், தெருக்களிலும் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டன. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இடி மின்னலுடன் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.