காளிப்பட்டி கந்தசாமி கோயிலில்கிருத்திகை சிறப்பு பூஜை
By DIN | Published On : 02nd May 2022 11:59 PM | Last Updated : 02nd May 2022 11:59 PM | அ+அ அ- |

காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் வளா்பிறை கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக மூலவருக்கு பால், மோா், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ரோஜா, சம்பங்கி, மருவு, மரிக்கொழுந்து, அரளி, துளசி உள்ளிட்ட மலா்கள் கனிகளால் கோயில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.