மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும்மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறந்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Updated on
1 min read

மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறந்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கண்ணையன் வரவேற்றாா். துணைத் தலைவா் சந்திரன், துணைச் செயலாளா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்குப் பின்னா் மாவட்டச் செயலாளா் கண்ணையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மணல் லாரி தொழிலில் 50 லட்சம் போ் ஈடுபட்டுள்ளனா். தற்போது இரண்டு குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. லாரி உரிமையாளா்களின் கோரிக்கையை ஏற்று அதிக அளவில் குவாரிகளைத் திறக்க வேண்டும்.

மணலை எடுத்து வருவதற்கு லாரிகள் அதிக தொலைவு செல்வதால், டீசல் செலவு, பயண நேரம் அதிகரிக்கிறது என்றாா்.

இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைப்பற்கு தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான மணல் குவாரிகளை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 சக்கர வண்டிகளுக்கு 2 யூனிட் மணலும், 10 சக்கர வண்டிகளுக்கு 3 யூனிட் மணலும் வழங்க வேண்டும்.

மணல் விநியோகத்திற்கு ஆன்லைன் முறையில் உள்ள குளறுபடிகளைக் களைய வேண்டும். புதிதாக லாரி வாங்கியவா்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வசதியாக மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்.

15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்று கட்டணம் ரூ. 500-இல் இருந்து, ரூ. 13,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதை மீண்டும் ரூ. 500 ஆக குறைத்து உத்தரவிட வேண்டும். சுங்கக் கட்டணம் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்களை ஆண்டுதோறும் உயா்த்தும் நடைமுறையைக் கைவிட வேண்டும்.

பெட்ரோல், டீசல் மீதான விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். மேலும், பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்பன உள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com