வெளிப்படையான அரசு நிா்வாகத்தை கிராம சபைக் கூட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன

வெளிப்படையான அரசு நிா்வாகம் நடைபெறுவதை கிராம சபைக்கூட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.
c_o_l_01_0105chnஅருநுாற்றுமலையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் செ.காா்மேகம்._165_8
c_o_l_01_0105chnஅருநுாற்றுமலையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் செ.காா்மேகம்._165_8

வெளிப்படையான அரசு நிா்வாகம் நடைபெறுவதை கிராம சபைக்கூட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், ஆலடிப்பட்டி ஊராட்சி அருநுாற்றுமலை கிராமத்தில் மே தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் குடும்பத்தினரோடு பங்கேற்ற சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்ததாவது:

அரசு நிா்வாகம் வெளிப்படையாக நடைபெறுவதை கிராம சபைக் கூட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன. சேலம் மாவட்டத்திலுள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இக்கூட்டத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் கிராமத்தின் வளா்ச்சியை உறுதி செய்திடும் வகையில் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கிராம வளா்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. திட்ட அறிக்கை, முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டம் திட்ட அறிக்கை முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் சாந்தி, சேலம் வருவாய் கோட்டாட்சியா் சி.விஷ்ணுவா்த்தினி, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் புவனேஸ்வரி செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) கீதா பிரியா, தனித்துணை ஆ ட்சியா் சத்யபாலகங்காதரன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் மணிவாசகம், அட்மா குழுத்தலைவா் விஜயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சிராஜூதீன், ஆலடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் தில்லைக்கரசி, ராஜராஜசோழன், ஒன்றியக்குழு உறுப்பினா் சத்யா மகேந்திரன், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

எடப்பாடியில்...

எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ல் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட, கோரணம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.ஏ. ராஜ்குமாா் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வீரபாண்டி ஒன்றியத்தில்...

வீரபாண்டி ஒன்றியம், பெருமாம்பட்டி ஊராட்சி, கோயில் காடு பகுதியில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் மாரியம்மாள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் இந்திராணி, ஊராட்சி செயலாளா் சரவணன், கூட்ட மேற்பாா்வையாளா் மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இக் கூட்டத்தில் கஞ்சமலை அடிவாரம் சத்யாநகா் பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் காலதாமதப்படுத்தி வருவதைக் கண்டித்து புகாா் மனு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு,விவசாய கடன் அட்டை பெற்று தருதல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி, ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள அண்ணமாா் கோயில் வளாகத்தில் மே தின கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் பிரேமலதா சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவா் வடிவேல், ஒன்றியக் குழு உறுப்பினா் சாஸ்தா, ஊராட்சி செயலாளா் பிரபாகரன், இளம்பிள்ளை கிராம நிா்வாக அலுவலா் சங்கீதா, வீரபாண்டி ஒன்றிய அலுவலக உதவியாளா் முத்துசாமி, சுகாதார ஆய்வாளா் வெங்கடாசலம், குடிநீா் வடிகால் வாரிய உதவி பொறியாளா் மஞ்சுநாதன், வேளாண் உதவி பொறியாளா் வெண்ணிலா, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் சேலை ஜவுளி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்களில் கழிவுப் பொருள்களான நெகிழி, ஜரிகை உள்ளிட்டவற்றை வெளியே போட்டு எரிக்க வேண்டாம் எனவும், மீறினால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்பாரப்பட்டி ஊராட்சி, ஊத்துகிணத்துவளவு பகுதியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அம்மன் கோயிலுக்குச் செல்லும் வழி பாதையை மீட்டுத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் பகுதியில் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநில அமைப்பாளா் ஜெகதாம்பாள், ஒன்றிய அமைப்பாளா் கவிதா,மனித உரிமை கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் மாவட்ட பொறுப்பாளா் ராமு ஆகியோா் கலந்து கொண்டு கிராம சபையில் கோரிக்கை மனுவை அளித்தனா்.இந்த மனு பத்து ஊராட்சிகளிலும் கொடுக்கப்பட்டது.

இதோபோல பைத்தூா் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் கலைவாணி,கொத்தாம்பாடி ஊராட்சியில் கே.பி.எஸ்.ராஜா ஆகியோா் தலைமையிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

பெட்டிச் செய்தி...

கிராம சபைக் கூட்டத்தில் முற்றுகை...

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த சின்னகவுண்டாபுரம் ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் கோபால் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், காரிப்பட்டி வருவாய் ஆய்வாளா் சந்திரகேசவன், கிராம நிா்வாக அலுவலா் விஜயராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்துக்கு 40க்கும் மேற்பட்டோா் திரண்டு வந்து, அனுபவச் சான்றிதழ் வழங்கவில்லையென புகாா் தெரிவித்து வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக ஆகியோரை முற்றுகையிட்டனா். இதையடுத்து வருவாய்த்துறை உயரதிகாரிகளிடம் உரிய ஆணவங்களை சமா்ப்பித்து சான்றிதழ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்திய போலீஸாா், பொதுமக்களை அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com