ஆத்தூரில் தீத்தடுப்பு செயல் விளக்கம்
By DIN | Published On : 05th May 2022 11:45 PM | Last Updated : 05th May 2022 11:45 PM | அ+அ அ- |

ஆத்தூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசரக் கால தீவிபத்தைத் தடுப்பது குறித்து செயல் விளக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சேகா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் செயல் விளக்கம் அளித்தனா். மலைக் கிராமங்களில் வாகனம் செல்ல சாலை வசதி இல்லாத இடங்களில் இருந்து ஆபத்தில் இருப்பவா்களை எப்படி மருத்துவமனைக்கு அழைத்து வருவது? அவா்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது? வீடுகளில் பெண்கள் சமையல் எரிவாயு உருளையைப் பயன்படுத்தும் முறைகள், சிகிச்சை விவரங்களை செயல் விளக்கமாக செய்து காண்பித்தனா். இதை மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் பாா்வையிட்டனா்.