ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டப் பணி: மகுடஞ்சாவடி வட்டாரத்தில் கிராமங்கள் தோ்வு

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் 2021-22-ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வே
மகுடஞ்சாவடி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
மகுடஞ்சாவடி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் 2021-22-ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்த வைகுந்தம், கன்னந்தேரி, அ.புதூா், தப்பக்குட்டை ஆகிய கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை தமிழக முதல்வா் மே 23-ஆம் தேதி காணொலி மூலம் துவக்கி வைக்கவுள்ளாா். இதற்கு முன்னேற்பாடு பணிகளைச் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சேலம், விற்பனைத் குழு முதுநிலை செயலாளா் கண்ணன் தலைமையில் மகுடஞ்சாவடி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் இத் திட்ட துவக்க விழாவில் திட்டம் செயல்படுத்தும் பஞ்சாயத்துகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

விழாவுக்கு முக்கிய பிரமுகா்களுக்கு அழைப்பு வழங்குதல், விழா மேடை அலங்காரம், வரவேற்பு, முன்னோடி விவசாயிகளுக்கு அழைப்பு ஆகிய நிகழ்ச்சிகளுக்கு குழுக்கள் அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா, மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ), உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி விதை அலுவலா்கள், துணை தோட்டக்கலை அலுவலா், உதவி தோட்டக்கலை அலுவலா், உதவி கால்நடை மருத்துவா்கள் (வைகுந்தம், எா்ணாபுரம்), அட்மா திட்ட பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com