முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் திமுகவில் இணைப்பு

ஆத்தூா் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் (அதிமுக), சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் திமுகவில் வியாழக்கிழமை இணைத்துக் கொண்டாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியக் குழுத் தலைவராக லிங்கம்மாள் பழனிசாமி கடந்த ஊராட்சி ஒன்றியத் தோ்தலில் போட்டியிட்டு தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா் 2021-இல் தனக்கு உடல் நிலை சரியில்லை என சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகத்திடம் மனு கொடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தாா்.

இந்நிலையில், சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கத்தை நேரில் சந்தித்த லிங்கம்மாள் பழனிசாமி, திமுகவில் இணைந்தாா். அவருக்கு மாவட்டப் பொறுப்பாளா் சால்வை அணிவித்து வரவேற்றாா் (படம்). இதில், ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வெ.செழியன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் பைத்தூா் ரவி, உறுப்பினா் கல்லை சேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com