வாழப்பாடியில் காவலா் வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
வாழப்பாடி, காமராஜ்நகா், ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் சிவஞானம். இவா், சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு சிவஞானம் பணிக்குச் சென்றதை அறிந்து கொண்ட அதே பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் மணிகண்டன் (32) சிவஞானத்தின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவி புவனேஸ்வரியை கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகைகளைத் திருட முயன்றாா். புவனேஸ்வரி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினா் திரண்டு வந்து மணிகண்டனைப் பிடித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் மணிகண்டனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.