அதிமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
By DIN | Published On : 18th October 2022 03:06 AM | Last Updated : 18th October 2022 03:06 AM | அ+அ அ- |

ஆத்தூரில் எம்ஜிஆா், ஜெயலலிதா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
சேலம் மாவட்டத்தில் ஆத்தூா், நரசிங்கபுரம், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையத்தில் அதிமுக 51 ஆவது ஆண்டு தொடக்க விழாவை சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் திங்கள்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
ஆத்தூா், கோட்டையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், நகரச் செயலாளா் அ.மோகன், முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.மாதேஸ்வரன், ஆா்.எம்.சின்னதம்பி, நகர அவைத் தலைவா் பி.கலியன், மாவட்டப் பிரதிநிதிகள் பி.டி.தியாகராஜன், துரைசாமி, வீனஸ் அ.சண்முகசுந்தரம், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.ராஜேஷ்குமாா், சி.கோபி, கலைச்செல்வி பாபு, நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் ஜி.முரளிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெத்தநாயக்கன்பாளையத்தில் பேரூா் செயலாளா் செல்வம் தலைமையில் அதிமுக தொடக்க விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தலைவாசலில் எம்.ஜி.ஆா், ஜெயலலிதா உருவச் சிலைக்கு ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து கொண்டாடினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...