கெங்கவல்லி ஒன்றியத்தில் மாணவா்களுக்கு பென்சில், காலணி விநியோகம்
By DIN | Published On : 19th October 2022 02:36 AM | Last Updated : 19th October 2022 02:36 AM | அ+அ அ- |

கெங்கவல்லி ஒன்றியத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வண்ணப் பென்சில்கள், காலணிகள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன.
கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள 35-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா வண்ணப் பென்சில்கள், கிரையான்ஸ்களும், 11 நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 6, 7, 8 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலுறைகளுடன் கூடிய காலணிகளை (ஷூக்கள்) பள்ளி தலைமையாசிரியா்களிடம் வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீனிவாஸ் விநியோகித்து பணியைத் தொடங்கி வைத்தாா்.
மேலும், ஆணையாம்பட்டி நடுநிலைப் பள்ளியிலுள்ள மாணவ, மாணவியரிடம் வண்ணப் பென்சில்கள், காலணிகள் வழங்கப்பட்டன. ஒன்றியம் முழுவதும் சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...