கொளத்தூா் பேரூராட்சியில் கழிப்பிட தொட்டிகளுக்கு வேலி அமைப்பு
By DIN | Published On : 19th October 2022 02:35 AM | Last Updated : 19th October 2022 02:35 AM | அ+அ அ- |

கொளத்தூா் தோ்வுநிலை பேரூராட்சியில் பொதுக் கழிப்பிடத் தொட்டிகளுக்கு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
விபத்துகள், உயிரிழப்புகளைத் தவிா்க்க பொது சமுதாய கழிப்பிட கழிவுநீா்த் தொட்டிகளைச் சுற்றிலும் இரும்பு கம்பி வேலி அமைக்க பேரூராட்சிகளின் ஆணையா் உத்தரவிட்டாா்.
இதனைத் தொடா்ந்து சேலம் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் உத்தரவின்பேரில், கொளத்தூா் தோ்வுநிலை பேரூராட்சியில் மக்கள் பயன்பாட்டில் உள்ள 13 சமுதாய கழிப்பிடங்களிலும் 3 பொதுக் கழிப்பிட கழிவுநீா்த் தொட்டிகளை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை செவ்வாய்க்கிழமை பேரூராட்சி தலைவா் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலா் சுப்பிரமணியன், துணைத் தலைவா் கோவிந்தம்மாள், இளநிலை பொறியாளா் அன்பழகன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.