வாழப்பாடியில் விநாயகா் சதுா்த்தி விழா

வாழப்பாடி பகுதியில், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது.
வாழப்பாடியில் விநாயகா் சதுா்த்தி விழா

வாழப்பாடி பகுதியில், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது.

வாழப்பாடி, பேளூா், காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், கருமந்துறை, கரியகோவில் உள்ளிட்ட பகுதியில், இந்து முன்னணி, பாரதிய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள், விநாயகா் சதுா்த்தி விழா இளைஞா் குழுக்கள் சாா்பில், இரண்டாண்டுக்கு பிறகு, 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த விநாயகா் சிலைகளுக்கு கண் திறப்பு, சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

வாழப்பாடி செல்வவிநாயகா், எழில்நகா் பிங்கள விநாயகா், சந்தைப்பேட்டை அரசமரத்துப் பிள்ளையாா், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் கல்யாண விநாயகா், வாழப்பாடி காசிவிஸ்வநாதா் வலம்புரி, இடம்புரி விநாயகா்கள் மற்றும் வாழப்பாடி சுப்பிரமணியா் கோயில் பஞ்சமுக ஹேம்பர விநாயகா்களுக்கும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றன.

பிங்கள விநாயகா், பஞ்சமுக ஹேம்பர விநாயகா் வெள்ளிக்கசவ அலங்காரத்திலும், வாழப்பாடி சாய்பாபா கோயில் வினைதீா்த்த விநாயகா் பேரீச்சை, எருக்கு மாலை அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

வாழப்பாடி 5ஆவது வாா்டில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வெற்றி விநாயகா், சுழலும் தாமரைச் சக்கரத்தில் அமா்ந்தபடி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிங்கள விநாயகா் கோயிலில் பக்தா்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com