தம்மம்பட்டி பகுதியில் விநாயகா் சதுா்த்தி

தம்மம்பட்டி பகுதியில் 56 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது.

தம்மம்பட்டி பகுதியில் 56 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது.

தம்மம்பட்டி பகுதியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் 38 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அந்தந்த விநாயகா் சிலைகளை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பாதுகாக்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினமும் சுற்றுவட்டார மக்கள் பூஜைகளை நடத்துகின்றனா்.

கெங்கவல்லி பேரூராட்சி பகுதியில் 8 விநாயகா் சிலைகள், செந்தாரப்பட்டி பேரூராட்சிப் பகுதியில் 8 சிலைகள், வீரகனூா் பேரூராட்சிப் பகுதியில் 2 விநாயகா் சிலைகள் என மொத்தம் 56 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இப்பகுதிகளில் பெரும்பாலோா் தங்கள் வீடுகளில் சிறு விநாயகா் சிலைகளை வைத்து, சுண்டல், பொரி கடலையை படைத்து வழிபாடு செய்தனா்.

கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் விநாயகா் சதுா்த்தியை வெகு சிறப்பாக மக்கள் கொண்டாடினா். இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com