சேலம்-ஏற்காடு பிரதான சாலையில் திடீர் மண் சரிவு: போக்குவரத்து துண்டிப்பு

சேலம் ஏற்காடு பிரதான சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சேலம்-ஏற்காடு பிரதான சாலையில் திடீர் மண் சரிவு: போக்குவரத்து துண்டிப்பு

சேலம் ஏற்காடு பிரதான சாலையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார்.

சேலம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தினந்தோறும் பெய்து  வரும் மழையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்காட்டில் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு மண் சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சேலம் ஏற்காடு பிரதான சாலை உள்ள 60 அடி பாலம் அருகே பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. 

இதனால் சாலையில் முழுவதும் மண் மூடி உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய பாறைகள் சாலைகளில் உருண்டுள்ளதால் அதனை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 

ராட்ஷச பொக்லின் இயந்திரங்கள், ஜேசிபி வாகனங்கள் மற்றும் கம்பரசர் மூலம் மண் சரிவு மற்றும் பாறையை அகற்றும்படி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரோடு இணைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைகளில் மூடி உள்ள மண்கள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் பாறைகள் வெடி வைத்து தாகர்க்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறும் போது, சேலம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பாறைகள் உருண்டுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஏற்காட்டிற்கு வரும் பொதுமக்கள் பகல் நேரத்தில் பாதுகாப்பாக வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இரவு நேரத்தில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த பணிகள் ஒரு சில மணி நேரங்களில் முடிவடையும் என்றும், பிறகு போக்குவரத்து துவங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com