சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்புகளுக்கு முதல்கட்ட சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (செப்.26) நடைபெறுகிறது.
சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வியாண்டின் பட்ட மேற்படிப்புகளுக்கு முதல்கட்ட சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (செப். 26) நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள், என்.சி.சி., முன்னாள் ராணுவத்தினா், விளையாட்டு என சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
தொடா்ந்து எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் மற்றும் எம்.காம். படிப்புகளுக்கு சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.
தொடா்ந்து எம்.எஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் மேற்படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. எனவே கல்லூரி அறிவிப்பு பலகை மற்றும் தொலைபேசி மூலம் தகவல் பெறும் மாணவியா் செப். 26 இல் தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவிகள் தங்களது 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலை மற்றும் அனைத்து பருவ மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா், இணையவழி விண்ணப்பப் படிவம் ஆகியவற்றின் அசல் சான்றிதழ், இரண்டு நகல்கள் கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும்.
மேலும், மாணவியா் காலை 10 மணிக்குள் கல்லூரி வளாகத்தில் இருக்க வேண்டும் என கல்லூரி முதல்வா் (பொறுப்பு) கீதா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.